வைரலாகும் டுவிட்டர் பதிவு... ஐஸ்வர்யாவை தோழி என்று சொன்ன தனுஷ்
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தனுஷ் வெளியிட்ட பதிவில் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டு இருப்பது பரபரப்பாகி உள்ளது.
நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இது பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரையும் சேர்த்து வைக்க முன்னணி நடிகர்கள் சிலரும், குடும்பத்தினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய இசை வீடியோ ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ்பாபு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களுடன் தனுசும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். டுவிட்டரில் தனுஷ் வெளியிட்ட பதிவில், ‘‘இசை வீடியோ வெளியிட்டுள்ள தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஐஸ்வர்யாவை தனுஷ் தோழி என்று குறிப்பிட்டது பரபரப்பாகி உள்ளது. இதற்கு ஐஸ்வர்யா நன்றி தனுஷ் என்று பதில் அளித்து பதிவிட்டு இருந்தார். இவர்கள் இருவரின் பதிவுகள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story