உக்ரைன் அதிகாரிக்கு உதவிய ராம்சரண்


உக்ரைன் அதிகாரிக்கு உதவிய ராம்சரண்
x
தினத்தந்தி 21 March 2022 5:59 AM IST (Updated: 21 March 2022 5:59 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஆர்.ஆர். படத்தின், சில காட்சிகள் உக்ரைனில் படமாக்கப்பட்ட போது ராம்சரணுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக ரஷ்டி என்பவர் இருந்துள்ளார். தற்போது போர் நடந்து வரும் சூழ்நிலையில் ரஷ்டிக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ராம்சரண் அனுப்பி இருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண். இவர் சிரஞ்சீவியின் மகன். ராம்சரண் நடித்த மகதீரா படம் தமிழிலும் வெளியானது. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., அக்‌ஷய்குமார், சமுத்திரக்கனி, ஆலியா பட், ஸ்ரேயா ஆகியோருடன் இணைந்து ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஆர்.ஆர்.ஆர். படத்தின், சில காட்சிகள் உக்ரைனில் படமாக்கப்பட்டு உள்ளன. உக்ரைனில் படப்பிடிப்பு நடந்தபோது ரஷ்டி என்பவர் ராம்சரணுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். போர் நடந்து வரும் சூழ்நிலையில் ரஷ்டிக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ராம்சரண் அனுப்பி இருக்கிறார். இதற்காக ராம்சரணுக்கு உக்ரைன் அதிகாரி ரஷ்டி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் “போர் தொடங்கியதும் ராம்சரண் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். என் மனைவியின் நோய் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கஷ்டப்படுவது பற்றி அவரிடம் சொன்னேன். உடனே எனக்கு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்தார். அவருக்கு நன்றி. போர் விரைவில் முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story