விஜய் சேதுபதியின் புதிய படம்
மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமன்றி மற்ற நடிகர்கள் படங்களில் இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசி விவசாயி படம் கடந்த மாதம் வெளியானது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
இந்நிலையில், அடுத்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிஸ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் ஆகிய படங்களும் விஜய் சேதுபதியின் கைவசம் உள்ளன.
Related Tags :
Next Story