ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 2 படங்கள்
கணவர் தனுசை விவாகரத்து செய்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் தீவிரமாகி உள்ளார்.
ரஜினிகாந்த் மகள் ஏற்கனவே 3 படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு உள்ளார். இசை ஆல்பத்துக்கு ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
கணவர் தனுசை விவாகரத்து செய்த நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் தீவிரமாகி உள்ளார். அடுத்து இந்தி படம் இயக்க இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட உண்மை சம்பவ காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த படத்தை பிரபல இந்தி தயாரிப்பாளர் மீனு அரோரா தயாரிக்கிறார். இவர் அமிதாப்பச்சன் நடித்த ஜூண்ட் படத்தை தயாரித்தவர். ஐஸ்வர்யா இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். படத்துக்கு ஒ சாதி சல் என்று பெயர் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் நடிக்கும் தமிழ் படத்தையும் ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story