ஆபாசமாக பேசியவருக்கு ‘மாஸ்டர்' நடிகை பதிலடி
மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சவுந்தர்யாவை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சவுந்தர்யா. தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சவுந்தர்யாவிடம் சமூக வலைத்தளத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் ஆபாசமாக கேள்வி எழுப்பினார். படுக்கைக்கு அழைத்து இழிவான வாசகங்களையும் பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த நபரின் பதிவை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் சவுந்தர்யா பகிர்ந்துள்ளார். சவுந்தர்யா வெளியிட்டுள்ள பதிவில் ‘இந்த நபர் மதுரையை சேர்ந்த பேராசிரியர் என்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் உள்ளது. ஒரு பேராசிரியர் பெண்ணிடம் இப்படி பேசி இருப்பது வெட்கக்கேடு. இவரது கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று பதிலடி கொடுத்து விளாசியுள்ளார்.
இதையடுத்து அந்த பேராசிரியருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆபாசமாக பேசியவரை வலைத்தளத்தில் அம்பலப்படுத்திய சவுந்தர்யாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story