விஜய்யின் ‘பீஸ்ட்' படம் தணிக்கை
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சில தினங்களுக்கு முன்பு தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். பட தணிக்கை குழு உறுப்பினர்கள் அதைப்பார்த்து தற்போது ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது என்று படத்தின் நீளத்துக்கான நேரத்தையும் தணிக்கை குழு வெளியிட்டு உள்ளது. பீஸ்ட் படம் தணிக்கையான விவரம் அறிந்து சான்றிதழை ரசிகர்கள் ஒரே நேரத்தில் தேடியதால் இணைய தளமே திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஸ்ட் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார்.
அடுத்ததாக, தெலுங்கு இயக்குனர் வம்சி டைரக்டு செய்யும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது விஜய்க்கு 66-வது படம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story