144 தடை உத்தரவு பிறப்பித்து ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் ரிலீஸ்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்படுவதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் இருந்து 1990-ல் இந்து பண்டிட்கள் வெளியேறிய சம்பவங்களை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் தயாராகி உள்ளது. இதில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை விவேக் அக்னிகோத்ரி இயக்கி உள்ளார். தி காஷ்மீர் பைல்ஸ் படம் அதிக வசூல் குவித்து வருகிறது. இந்த படத்துக்கு மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன. இந்த படக்குழுவினரை பிரதமர் நரேந்திரமோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
இன்னொரு புறம், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்படுவதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story