சமூக வலைத்தளத்தில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா


சமூக வலைத்தளத்தில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா
x
தினத்தந்தி 24 March 2022 7:58 PM IST (Updated: 24 March 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

ஐஸ்வர்யா டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது பெயரை மாற்றி உள்ளார்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுசும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தனுசுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க குடும்பத்தினரும், நடிகர்களும் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரையே வைத்து இருந்தார். இதன் மூலம் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், ஐஸ்வர்யா டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கி விட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றி உள்ளார்.

ஐஸ்வர்யா தற்போது சினிமா பணிகளில் தீவிரமாகி உள்ளார். ஏற்கனவே 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா இப்போது இந்தியில் படம் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Next Story