தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய பிந்து மாதவி


தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய பிந்து மாதவி
x
தினத்தந்தி 25 March 2022 3:27 PM IST (Updated: 25 March 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

பிந்து மாதவிக்கு ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் பெருகியதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், ‘பிந்து மாதவி ஆர்மி’ என்ற அமைப்பு உருவானது. இது, தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிந்து மாதவி. தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 ஆகிய வெற்றி படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு பட உலகிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். இதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகினார்கள். சமூக வலைத்தளங்களில், ‘பிந்து மாதவி ஆர்மி’ என்ற அமைப்பு உருவானது. இது, தெலுங்கு பட உலகில் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது தமிழில், சசிகுமாருடன் ‘பகைவனுக்கு அருள்வாய்’, மற்றும் ‘மாயன், ’ ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்கள் பிந்து மாதவியின் நடிப்பில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

Next Story