குற்றப்பின்னணி-திகிலுடன் இதய துடிப்பை எகிறச் செய்யும் ‘பேட்டரி’


குற்றப்பின்னணி-திகிலுடன் இதய துடிப்பை எகிறச் செய்யும் ‘பேட்டரி’
x
தினத்தந்தி 25 March 2022 4:10 PM IST (Updated: 25 March 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

பார்வையாளர்களின் இதய துடிப்பை எகிறச் செய்யும் குற்றப்பின்னணியிலான திகில் படம் ‘பேட்டரி’ என டைரக்டர் மணிபாரதி தெரிவித்தார். இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

‘‘சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடக்கின்றன. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழிடம் ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளி களை கண்டுபிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார்.

தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலைகிறார், கமிஷனர் விக்டர். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட திரைக்கதைதான் ‘பேட்டரி’ படம்’’ என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் மணிபாரதி. இவர் மேலும் கூறியதாவது:-

‘‘இது, பார்வையாளர்களின் இதய துடிப்பை எகிறச் செய்யும் குற்றப்பின்னணியிலான திகில் படம். கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் இருப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அவை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாகி விட்டன. அதனிடம் இருந்து தர்மத்தை மீட்பதே ‘பேட்டரி.’

படத்தில் வரும் திருப்பங்கள் ஏன், எதற்கு, எப்படி? என்ற ஆர்வத்தை தூண்டும். கதாநாயகனாக செங்குட்டுவன், கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி போலீஸ் அதிகாரியாக அறிமுகம் ஆகிறார். யோக் ஜேப்பி, எம்.எஸ்.பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிசேக், ரமா, பேபி மோனிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ராஜேஷ்குமார் படத்தொகுப்பை கவனிக்க, சி.மாதையன் தயாரித்து இருக்கிறார். படம், மே மாதம் திரைக்குவர இருக்கிறது.’’

Next Story