பல மொழி படங்களில் நடித்து மாநிலம் தோறும் வீடு வாங்கும் நடிகைகள்


பல மொழி படங்களில் நடித்து மாநிலம் தோறும் வீடு வாங்கும் நடிகைகள்
x
தினத்தந்தி 25 March 2022 4:39 PM IST (Updated: 25 March 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

சமந்தா, ராய்லட்சுமி, ரகுல் பிரீத் சிங், ராஷ்மிகா மந்தனா ஆகிய 4 பேரும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு மாநிலங்கள் தோறும் சொந்தமாக வீடு வாங்குகிறார்கள்.

திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் அனைவருமே தங்களின் தாய்மொழி படங்களில் நடிப்பதுடன், பிற மொழி படங்களிலும் நடித்து அதிக வருமானம் பார்க்கிறார்கள். இந்தவகையில் இப்போது வரும் புதுமுக கதாநாயகிகளுக்கு நயன்தாராவும், திரிஷாவும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த இவர்கள், தாய்மொழி (மலையாளம்) படங்களில் நடிப்பதுடன் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்கள். இருவருமே சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை `ரியல் எஸ்டேட்'டில் முதலீடு செய்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு படி மேலே போய் சமந்தா, ராய்லட்சுமி, ரகுல் பிரீத் சிங், ராஷ்மிகா மந்தனா ஆகிய 4 பேரும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு மாநிலங்கள் தோறும் சொந்தமாக வீடு வாங்குகிறார்கள்.

தமிழ் படங்களில் நடிக்கும்போது சென்னையிலும், தெலுங்கு படங்களில் நடிக்கும்போது ஐதராபாத்திலும், மலையாள படங்களில் நடிக்கும்போது கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும், கன்னட படங்களில் நடிக்கும்போது பெங்களூருவிலும் வீடு வாங்குவதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

4 பேருக்குமே 4 மாநிலங்களிலும் சொந்த வீடுகள் உள்ளன.

Next Story