சிகரெட் சர்சையில் தனுஷ்


சிகரெட் சர்சையில் தனுஷ்
x
தினத்தந்தி 28 March 2022 3:56 PM IST (Updated: 28 March 2022 3:56 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ் சிகரெட் பிடிக்கும் புதிய போஸ்டர் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.

தனுஷ் நடித்த மாறன் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதனால் நானே வருவேன் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். 

நானே வருவேன் படத்தில் வரும் தனுஷ் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் தனுஷ் கால்மேல் கால்போட்டு சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக அமர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. தனுஷ் தோற்றத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். இந்த போஸ்டருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது. தனுஷ் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்றும் புகைப்பிடிக்காமல் உங்கள் கதாநாயகன் மிடுக்கை வெளிப்படுத்த முடியாதா? என்றும் வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைதளத்தில் பரபரப்பாகி உள்ளது.


Next Story