சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு படமாகிறது
வினய் சந்திரா டைரக்ஷனில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு படமாகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு. கவிஞரான இவர், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசில் முதல் பெண் தலைவராகவும், முதல் பெண் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். சரோஜினி நாயுடுவின் வாழ்க்கைக் கதை சினிமா படமாக தயாராகிறது. இதில், சரோஜினி நாயுடுவாக நடிகை பானுபிரியாவின் சகோதரி நிஷாந்தி நடிக்கிறார். இவரது இயற்பெயர் சாந்திப்பிரியா. ஆனால் நிஷாந்தி என்ற பெயரில் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன், ஒன்று எங்கள் ஜாதியே, ரயிலுக்கு நேரமாச்சு, பூவிழி ராஜா, சிறையில் பூத்த சின்ன மலர் உட்பட பலப் படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் சோனல் மொன்டீரோ, ஹில்டன் தேஜ்வானி, ஜரினா வஹாப் மேலும் பலர் நடிக்கின்றனர். வினய் சந்திரா டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராக உள்ளது.
இதில் நடிப்பது குறித்து நிஷாந்தி கூறும்போது, “நமது நாட்டின் வலிமையான பெண்ணாக திகழ்ந்த சரோஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்'' என்றார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.
Related Tags :
Next Story