தனுஷ் ஜோடியாக வெளிநாட்டு நடிகை


தனுஷ் ஜோடியாக வெளிநாட்டு நடிகை
x
தினத்தந்தி 30 March 2022 3:02 PM IST (Updated: 30 March 2022 3:02 PM IST)
t-max-icont-min-icon

நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சுவீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரமை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. நானே வருவேன் படத்தை தனுஷ் சகோதரர் செல்வராகவன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதனால் நானே வருவேன் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சுவீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரமை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நானே வருவேன் படத்துக்கான தனுஷ் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே காஜல் அகர்வாலுடன் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக இந்துஜா நடிப்பதாக கூறப்படுகிறது.

Next Story