சீன மொழியில் திரிஷ்யம்


சீன மொழியில் திரிஷ்யம்
x
தினத்தந்தி 31 March 2022 3:32 PM IST (Updated: 31 March 2022 3:32 PM IST)
t-max-icont-min-icon

இந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தை சீன மொழியில் வெளியிட உள்ளனர்.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் தமிழிலும் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வசூல் பார்த்தது. இந்தி திரிஷ்யம் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கனும், மீனா வேடத்தில் ஸ்ரேயாவும் நடித்து இருந்தனர். தபு போலீஸ் அதிகாரியாக வந்தார். மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 3-ம் பாகமும் வந்துள்ளது. 

இந்த நிலையில் தற்போது இந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தை சீன மொழியில் வெளியிட உள்ளனர். சீன மொழி டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த மாதம் சீன மொழியில் திரிஷ்யம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.


Next Story