மாதவன் இயக்கிய படத்தில் கவுரவ வேடங்களில் சூர்யா-ஷாருக்கான்


மாதவன் இயக்கிய படத்தில் கவுரவ வேடங்களில் சூர்யா-ஷாருக்கான்
x
தினத்தந்தி 1 April 2022 2:15 PM IST (Updated: 1 April 2022 2:15 PM IST)
t-max-icont-min-icon

மாதவன் இயக்கிய படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகிய இருவரும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் மாதவன், ‘ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். இது, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு அதில் சிக்கி, பல ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

இந்தப் படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவருடன் சிம்ரன், ரஜத்கபூர், ரவிராகவேந்திரா, மிசா கோசல், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூர்யா, ஷாருக்கான் ஆகிய இருவரும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா, ரஷியா ஆகிய நாடுகளில் படம் வளர்ந்துள்ளது.


Next Story