விரைவில் வரும் புதிய உறவு - காஜல் அகர்வால்


விரைவில் வரும் புதிய உறவு - காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 1 April 2022 2:17 PM IST (Updated: 1 April 2022 2:24 PM IST)
t-max-icont-min-icon

காஜல் அகர்வால் தனது கர்ப்ப காலத்திலும் ஒரு ‘போட்டோஷூட்’ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

2008-ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், காஜல் அகர்வால். ‘சரோஜா’, ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘கோமாளி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கும் அவர், தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்.

கடந்த 2020-ம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரியளவில் அவர் படங்கள் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் திகில் ‘வெப்’ தொடரில் மட்டும் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் அறிவித்திருந்தார். நடிகைகள் அவ்வப்போது தன் அழகை வெளிப்படுத்தி ‘போட்டோஷூட்’ எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் காஜல் அகர்வாலும் கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்கம், மேற்கொள்ள வேண்டிய உடற் பயிற்சிகள் போன்றவற்றையும் வீடியோவாக தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

தற்போது காஜல் அகர்வால் தனது கர்ப்ப காலத்திலும் ஒரு ‘போட்டோஷூட்’ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘விரைவில் புதிய உறவு வரப்போகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story