ராஷ்மிகாவுக்கு பிடித்தது தமிழா, தெலுங்கா?
ராஷ்மிகாவுக்கு பிடித்தது தமிழா, தெலுங்கா? என்ற கேள்விக்கு ‘தமிழ், தெலுங்கு என்று வித்தியாசம் பார்ப்பதில்லை என்று சிரித்தபடி பதில் அளித்தார்.
கார்த்தியுடன், ‘சுல்தான்’ படத்தில் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. இவர், மும்பையைச் சேர்ந்தவர். தெலுங்கு பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருக்கிறார். அவரிடம், ‘‘உங்களுக்கு பிடித்தது தமிழ் படங்களா? அல்லது தெலுங்கு படங்களா? எந்த மொழி படத்தில் நடிக்கும்போது சவுகரியமாக உணர்வீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு ராஷ்மிகா சிரித்தபடி பதில் அளித்தார். ‘‘தமிழ், தெலுங்கு என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. நல்ல கதையா, இல்லையா? என் கதாபாத்திரம் எப்படிப்பட்டது? என்பதைத்தான் முதலில் பார்ப்பேன்’’ என்றார்.
நயன்தாரா ‘கால்ஷீட்’ கிடைக்காத தயாரிப்பாளர்கள், ராஷ்மிகாவை தேடிப்போய் ஒப்பந்தம் செய்கிறார்களாம்.
Related Tags :
Next Story