மீண்டும் கதாநாயகனாக அஜ்மல்


மீண்டும் கதாநாயகனாக அஜ்மல்
x
தினத்தந்தி 1 April 2022 2:50 PM IST (Updated: 1 April 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

‘தீர்க்கதரிசி’ என்ற புதிய படத்தில் அஜ்மல் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமான அஜ்மல், அந்தப் படத்தில் வேலையில்லாத பட்டதாரி இளைஞராக நடித்து இருந்தார். ‘கோ’ படத்தில் வில்லனாக மாறினார். ‘கருப்பம்பட்டி’, ‘வெற்றி செல்வன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். நயன்தாராவுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். மீண்டும் அவர், ‘தீர்க்கதரிசி’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ர.சுந்தரபாண்டியன், கோ.மோகன் ஆகிய இருவரும் இயக்கு கிறார்கள். பி.சதீஷ்குமார் தயாரிக் கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Next Story