'காதலும் கவுந்து போகும்' - கலையரசன் நடித்துள்ள 'டைட்டானிக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் கலையரசன் நடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கி உள்ளார். இவர் பாலா, சுதா கொங்கரா, பாலாஜி மோகன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த படத்தில் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
முதலில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது மே 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Laughter riot rom-com #Titanic is releasing on May 6th, in theatres #TitanicFromMay6@thirukumaranEnt@kalaiActor@anandhiactress@ashnazaveri@kaaliactor@dirjanakiraman@actorRagavVijay@nivaskprasanna@IgnatiousAswin@thinkmusicindia@onlynikil@digitallynowpic.twitter.com/rS3rRhaDzv
— C V Kumar (@icvkumar) April 2, 2022
Related Tags :
Next Story