சூர்யா தயாரித்துள்ள 'ஓ மை டாக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


சூர்யா தயாரித்துள்ள ஓ மை டாக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 6 April 2022 8:08 PM IST (Updated: 6 April 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யா தயாரித்துள்ள 'ஓ மை டாக்' படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'ஓ மை டாக்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

Next Story