சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார். இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Happy to share the first look of @SunnyLeone ‘s #OhMyGhost . Congrats team. @actorsathish@iyogibabu@dharshagupta@rameshthilak@arjunannk@thangadurai123@javeddriaz@dharankumar_c@deepakdmenon@editorsiddharth@sasikumarwhs@1gpmuthu@DoneChannel1@WhiteHorseOfflpic.twitter.com/xXWROWph5R
— VijaySethupathi (@VijaySethuOffl) April 6, 2022
Related Tags :
Next Story