கே.ஜி.எஃப் 3..! தகவலை வெளியிட்ட படக்குழு
கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்கில் இன்று வெளியானது.
பெங்களூரு,
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு விமர்சனங்களும் சாதகமாக வந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதாவது படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு படத்தின் இறுதியில் தெரிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story