அருண்விஜய் நடித்துள்ள 'யானை' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!
நடிகர் அருண்விஜய் நடித்துள்ள 'யானை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யானை'. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இந்த திரைப்படம் ரிலீசுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, பலமுறை தள்ளிப்போனது. வருகிற மே மாதம் 6-ந்தேதி யானை திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந் நிலையில், தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தற்போது விநியோகஸ்தரின் வேண்டுகோளின் பேரில் யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Humbled to announce the change of release date upon distributors request..#Yaanai 🐘 all set to rule the screens from this June 17th in cinemas.#YannaifromJune17@arunvijayno1#DirectorHARI@DrumsticksProd@priya_Bshankar@realradikaa@iYogibabu@gvprakash@thondankanipic.twitter.com/HtByHpPJ0U
— ArunVijay (@arunvijayno1) April 14, 2022
Related Tags :
Next Story