வெற்றிமாறனின் ஆய்வகத்துக்கு பட அதிபர் தாணு ரூ.1 கோடி நன்கொடை


வெற்றிமாறனின் ஆய்வகத்துக்கு பட அதிபர் தாணு ரூ.1 கோடி நன்கொடை
x
தினத்தந்தி 17 April 2022 2:15 PM IST (Updated: 17 April 2022 2:15 PM IST)
t-max-icont-min-icon

திரை பண்பாடு ஆய்வகத்தின் துவக்க நாளில் கலைப்புலி எஸ்.தாணு, முதல் நபராக முன்வந்து ரூபாய் 1 கோடிக்கான செக்கை வெற்றிமாறன் தாயாரிடம் கொடுத்தார்.

சினிமா டைரக்டர் வெற்றிமாறன், ‘நாம்’ என்ற அறக்கட்டளையின் சார்பில் திரை பண்பாடு ஆய்வகத்தை தொடங்கி இருக்கிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்-மாணவிகளுக்கு இந்த அமைப்பு உதவி வருகிறது. இதற்காக பட அதிபர் எஸ்.தாணு ரூ.1 கோடி வழங்கினார்.

அத்துடன் வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு தனது ‘வி’ கிரியேசன்ஸ் நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பும் தரப்படும் என்று எஸ்.தாணு அறிவித்தார்.

Next Story