தங்கை மோனல் குறித்து சிம்ரன் உருக்கமான பதிவு


தங்கை மோனல் குறித்து சிம்ரன் உருக்கமான பதிவு
x
தினத்தந்தி 17 April 2022 2:30 PM IST (Updated: 17 April 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

நடிகை மோனல் திடீரென கடந்த 2002ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்கை மோனலுடன் இருக்கும் சிறு வயது போட்டோவை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90-களில் கதாநாயகியாக கோலோச்சியவர் சிம்ரன். இவரது நடிப்புக்கும், நடனத்துக்கும் ரசிகர்கள் ஏராளம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சிம்ரனின் தங்கை மோனல், ‘பார்வை ஒன்றே போதும்', என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 2002-ம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சிக்குள்ளானது.

20 வருடங்கள் கழிந்த நிலையில் சிம்ரன், தனது தங்கை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நீ இப்போது என்னுடன் இல்லை. ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று. 20 வருடங்கள் கழிந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய். நாங்கள் எப்போதும் உன்னை ‘மிஸ்' செய்கிறோம், மோனு”.

இவ்வாறு சிம்ரன் அதில் கூறியுள்ளார்.


Next Story