கன்னட படத்தில் சந்தானம்
நடிகர் சந்தானம் கன்னடத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
தமிழ், திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் கதாநாயகனாக மாறி உள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம், குளுகுளு ஆகிய படங்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குளுகுளு படத்தை மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ரத்ன குமார் டைரக்டு செய்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் சந்தானத்துக்கு அழைப்புகள் வருகின்றன. ஆனால் கதாநாயகனாக நடிக்கவே முன்னுரிமை கொடுக்கிறார். இந்த நிலையில் அடுத்து கன்னட படமொன்றில் சந்தானம் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story