தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மரணம்


தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மரணம்
x
தினத்தந்தி 20 April 2022 5:02 PM IST (Updated: 20 April 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்தார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வந்தார்.

இந்த இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் நாகார்ஜுனா, காஜல் அகர்வால் நடித்த த கோஸ்ட், நாகசைதன்யா, சாய்பல்லவி நடித்த லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார்.

நாராயண் தாஸ் நாரங்குக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நாராயண் தாஸ் நாரங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. நாராயண் தாஸ் நாரங் உடலுக்கு நடிகர்- நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சிவகார்த்திகேயன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

Next Story