கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா..!
கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருக்கிறார்
சென்னை,
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் இந்த பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் நல்ல வரவேற்பைப்பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது சூர்ரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
𝐒𝐨𝐦𝐞 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐭𝐨𝐫𝐢𝐞𝐬 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐨𝐥𝐝, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐝 𝐫𝐢𝐠𝐡𝐭.
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur@hombalefilms@HombaleGrouppic.twitter.com/mFwiGOEZ0K
Related Tags :
Next Story