7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா


7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா
x
தினத்தந்தி 21 April 2022 2:19 PM IST (Updated: 21 April 2022 2:19 PM IST)
t-max-icont-min-icon

ஏழு வருடமாக டைரக்‌ஷனில் இருந்து விலகி இருந்தது ஏன்? என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ‘3’ படத்தின் மூலம் டைரக்டரானார். தொடர்ந்து 2015-ல் வெளியான ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கி இருந்தார். அதன்பிறகு அவர் படங்கள் டைரக்டு செய்யவில்லை.

இந்நிலையில், கணவர் தனுஷை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். சமீபத்தில் பயணி என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார். அடுத்து இந்தியில் ‘ஒ சாதி சல்’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.

மீண்டும் படம் இயக்குவது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “வை ராஜா வை’' படம் ரிலீஸ் ஆனதும் எனக்கு தமிழ், இந்தி பட உலகில் இருந்து படம் இயக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனது குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததாலும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்ததாலும் படம் இயக்க முடியவில்லை.

தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இதனால் மீண்டும் படம் இயக்க வந்துள்ளேன். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் டைரக்டு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்க ஆர்வம் உள்ளது’’ என்றார்.


Next Story