5 ஆண்டுகள் கடந்த பாகுபலி 2 ...போஸ்டரை பகிர்ந்து மகிழ்ந்த படக்குழு - ரசிகர்கள் கொண்டாட்டம்


5 ஆண்டுகள் கடந்த பாகுபலி 2 ...போஸ்டரை பகிர்ந்து மகிழ்ந்த படக்குழு - ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 8:53 PM IST (Updated: 28 April 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது.

சென்னை,

இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2, இதில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது. 

படம் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளது. 


Next Story