160 மொழிகளில் வரும் அவதார் 2-ம் பாகம்
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார்-2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் அவதார். இந்த படம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது.
அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது. 2 மற்றும் 3-ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நடந்து வந்தன. அவதார் 2-ம் பாகம் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.
இந்நிலையில், அவதார் 2-ம் பாகம் படம் டிசம்பர் 16-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு 2-ம் பாகம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார்-2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரும் விரைவில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தைப்போல் அவதார் 2-ம் பாகமும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story