உருவ கேலிக்கு மஞ்சிமா பதிலடி
தனக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் வந்த பதிவுகளை பகிர்ந்து மஞ்சிமா மோகன் கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்ளக் தர்பார். எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மஞ்சிமா மோகனுக்கு உடல் எடை கூடியுள்ளது. இதையடுத்து அவரது தோற்றத்தை வலைத்தளத்தில் சிலர் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பதில் அளித்து வந்தார். ஆனாலும் உருவ கேலி செய்வதை நிறுத்தவில்லை.
இதையடுத்து தனக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் வந்த பதிவுகளை பகிர்ந்து மஞ்சிமா மோகன் கோபமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோருக்கும் ஆரோக்கியமாக இருக்கத்தான் ஆசை. ஆனாலும் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. சிலருக்கு சில கோளாறுகளால் உடல் எடை கூடி இருக்கலாம்.
எனவே உருவ கேலி செய்வதை நிறுத்துங்கள். கேலி செய்வதன் மூலமாக ஒருவருடைய உடல் எடையை குறைத்து விட முடியாது. கேலி செய்து அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள். நான் மற்றவர்களின் உடல், நிறம் பற்றி பேசுவது இல்லை. எல்லோரையும் மதியுங்கள். பாராட்டுங்கள். இல்லையேல் விட்டு விடுங்கள். சங்கடப்படுத்த வேண்டாம். வாழு. வாழ விடு என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story