67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்?


67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்?
x
தினத்தந்தி 29 April 2022 10:28 AM IST (Updated: 29 April 2022 10:28 AM IST)
t-max-icont-min-icon

67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தொடர்ந்து வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். 

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சய்தத் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். 

சமீபத்தில் பல மொழிகளில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் 2-ம் பாகம் கன்னட படத்தில் சஞ்சய்தத் கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார். அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக அமைந்தது. விஜய்யின் 67-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் சஞ்சய்தத்தை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story