கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக தீபிகா படுகோனே


கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 29 April 2022 11:45 AM IST (Updated: 29 April 2022 11:45 AM IST)
t-max-icont-min-icon

கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட விழாவாக கருதப்படும், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மே மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும். 

இறுதியில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருது பெற தகுதியான படங்களை தேர்வுசெய்ய பிரெஞ்ச் நடிகர் வின்செண்ட் லிண்டன் தலைமையில் 8 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், ஐயன்மேன் 3 படத்தின் நாயகி ரெபேக்கா ஹால், இயக்குனர் ஜேப் நிக்கோலஸ் ஆகியோரும் உள்ளனர். 

இவர்களுடன் தீபிகா படுகோனேவும் நடுவர்களில் ஒருவராக தேர்வாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story