இந்தி மொழி சர்ச்சை... அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு


இந்தி மொழி சர்ச்சை... அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 April 2022 12:47 PM IST (Updated: 29 April 2022 12:47 PM IST)
t-max-icont-min-icon

இந்தி மொழி சர்ச்சையில் அஜய்தேவ்கனுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக பல மாநிலங்கள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் கன்னட படமான கே.ஜி.எப் 2-ம் பாகம் இந்தியில் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்து பேசிய கன்னட நடிகர் சுதீப், “கன்னட படம் இந்தியில் வெற்றி பெற்று இருப்பதாக பலர் பேசுகிறார்கள். 

அப்படி பேச வேண்டாம். இந்தி நமது தேசிய மொழி அல்ல'' என்றார். இதனால் ஆத்திரமான இந்தி நடிகர் அஜய்தேவ்கன், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால் ஏன் உங்கள் படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறீர்கள். இந்திதான் தேசிய மொழி” என்றார். 

இது சர்ச்சையாகி அஜய்தேவ்கனுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட ரசிகர்கள் அஜய்தேவ்கனை கண்டித்து வருகிறார்கள். ஆர்.ஆர்.ஆர். தெலுங்கு படத்தில் நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். நடிகை ரம்யாவும், “அஜய்தேவ்கன் அறியாமையில் பேசி இருக்கிறார். இந்தி தேசிய மொழி கிடையாது. உங்கள் படங்களை நாங்கள் பார்ப்பது போல் எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்து பாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story