சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் புதிய அப்டேட்
டான் திரைப்படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் ,சிவகார்த்திகேயன் எழுதியுள்ள டான் திரைப்படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .
Third single #PrivateParty from #DON releasing tomorrow at 5pm 😎
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 29, 2022
ROCKSTAR @anirudhofficial musical 🥳@Dir_Cibi@priyankaamohan@shobimaster@jonitamusic@KalaiArasu_@SKProdOffl@LycaProductions@bhaskaran_dop@Inagseditor#DONfromMay13pic.twitter.com/je5yXvrR1L
Related Tags :
Next Story