மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து பாலியல் புகாரில் சிக்கிய வில்லன் நடிகர் நீக்கம்?
பாலியல் புகாரில் சிக்கிய விஜய் பாபுவை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளவர் விஜய் பாபு. இவர் மீது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் நடிகை போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதில் விஜய் பாபு சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி மயக்க மருந்து கொடுத்து பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து இருப்பதாக மிரட்டுகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். விஜய் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் நடிகை புகார் அளித்ததுமே விஜய் பாபு துபாய் தப்பி சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய்பாபு மீது இன்னொரு பெண்ணும் முகநூல் பக்கதில் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2021-ல் தொழில் விஷயமாக விஜய்பாபுவை சந்தித்தேன். அப்போது மது அருந்தி இருந்தார். என்னையும் மது குடிக்கும்படி கட்டாயப்படுத்தினார். பிறகு எனக்கு முத்தம் கொடுக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார். நான் மறுத்தேன். உடனே என்னிடம் மன்னிப்பு கேட்ட அவர் நடந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் என்றார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய விஜய் பாபுவை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story