எடை கூடியதால் புறக்கணிப்பு: டைரக்டர்களை சாடிய நடிகை
குண்டாக இருப்பதாகக் கூறியே பல படங்களில் டைரக்டர்கள் நிராகரித்தார்கள் என்று நடிகை புளோரா சைனி புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘கஜேந்திரா', பிரபுவுடன் ‘குஸ்தி’ மற்றும் ‘திண்டுக்கல் சாரதி', ‘நானே என்னுள் இல்லை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் புளோரா சைனி. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில், தனது உடல் எடையை காட்டி பட வாய்ப்புகள் தராமல் புறக்கணித்ததாக, டைரக்டர்கள் மீது புளோரா குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து புளோரா அளித்துள்ள பேட்டியில், ‘’நான் உடல் எடை கூடி, குண்டாக இருப்பதாக சொல்லி இந்தி பட உலகினர் புறக்கணித்தனர். தென்னிந்திய திரையுலகில் எனக்கு பட வாய்ப்புகள் வந்தன. குண்டாக இருக்கும் நடிகைகளை தென்னிந்திய ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தி பட உலகில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. நான் மும்பையில் நடிகை தேர்வில் பங்கேற்றபோது, வாய்ப்பு தராமல் வெளியேற்றினர். உங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதால், கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கமாட்டீர்கள் என்று சொல்லி டைரக்டர்கள் நிராகரித்தனர். இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு உடலை ஒல்லியாக்க பல நாட்கள் பட்டினி கிடந்தேன். ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன். உடல் எடையை காரணமாக வைத்து நடிகைகளை ஒதுக்கக்கூடாது'' என்றார்.
Related Tags :
Next Story