ஹாலிவுட் நடிகருடன் எமிஜாக்சன் காதல்
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன், எமிஜாக்சனுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் மதராசபட்டினம் படத்தில் அறிமுகமான எமிஜாக்சன். ரஜினியுடன் 2.0, விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுசின் தங்க மகன். உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
எமிஜாக்சன் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் ஏற்பட்ட காதலும் முறிந்தது. தொடர்ந்து லண்டனில் ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஜார்ஜ் என்பவரை காதலித்தார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணத்தையும் நிச்சயம் செய்தனர். இதற்கிடையே எமிஜாக்சன் கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு ஜார்ஜை திருமணம் செய்துகொள்ள தயாரான நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன், எமிஜாக்சனுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எட் வெஸ்ட்விக்கோடு ஜோடியாக எமிஜாக்சன் கை கோர்த்தபடி வரும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story