சூர்யா படத்தின் வதந்திக்கு விளக்கம்


சூர்யா படத்தின் வதந்திக்கு விளக்கம்
x
தினத்தந்தி 5 May 2022 1:08 PM IST (Updated: 5 May 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

சூர்யா படம் வதந்திக்கு படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் விளக்கம் அளித்தார்.

சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவுக்கு 41-வது படம். சமீபத்தில் சூர்யா மும்பை சென்று சூரரை போற்று இந்தி படத்தின் ரீமேக் பட பூஜையில் கலந்து கொண்டு விட்டு வந்தார். இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பாலா படத்தில் பங்கேற்றபோது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பில் இருந்து சூர்யா வெளியேறி விட்டார் என்றும் வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலா படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. 

இதற்கு விளக்கம் அளித்து படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, “அந்த தகவல் முற்றிலும் தவறானது. பாலா, சூர்யா கூட்டணியில் தயாராகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேசுவரம் பகுதிகளில் மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்று திட்டமிட்ட தேதியில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்குகிறது’’ என்றார்.

Next Story