வலைத்தளத்தில் அவதூறு: மஞ்சு வாரியர் புகாரில் பிரபல டைரக்டர் கைது


வலைத்தளத்தில் அவதூறு: மஞ்சு வாரியர் புகாரில் பிரபல டைரக்டர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 11:16 AM IST (Updated: 6 May 2022 11:16 AM IST)
t-max-icont-min-icon

வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக மஞ்சு வாரியர் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அளித்த புகாரின் பேரில் பிரபல டைரக்டரை போலீசார் கைது செய்தனர்.

தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து பிரபலமானவர் மஞ்சுவாரியர். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் “நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்’’ என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மஞ்சுவாரியர் நடித்த கயட்டம் படத்தை சணல்குமார் சசிதரன் இயக்கி இருந்தார். மேலும் இவர் இயக்கிய சில மலையாள படங்கள் விருதுகள் பெற்றுள்ளன.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் சமூக வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடுவதாகவும் சணல்குமார் சசிதரன் மீது புகார் அளித்தார்.

இந்த புகார் மீது எர்ணாகுளம் இளமக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழக-கேரள எல்லையான பாறசாலையில் சணல்குமார் சசிதரனை நேற்று கைது செய்தனர்.

Next Story