வில்லனாக மம்முட்டி


வில்லனாக மம்முட்டி
x
தினத்தந்தி 6 May 2022 11:35 AM IST (Updated: 6 May 2022 11:35 AM IST)
t-max-icont-min-icon

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் மம்முட்டி ‘புழு' என்ற மலையாள படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

தமிழ் படங்களில் கதாநாயகர்கள் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல், விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்றார். தனுசின் அனேகன் படத்தில் கார்த்திக்கும், அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யும், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியும் வில்லனாக நடித்துள்ளனர். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் மம்முட்டி ‘புழு' என்ற மலையாள படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். 

வில்லன் கதாபாத்திரம் என்றதும் தன்னை வில்லனாக சித்தரிப்பதற்கான வலுவான காரணங்கள் படத்தில் உள்ளதா? நடிப்பை வெளிப்படுத்துவற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்று மம்முட்டி கேட்டதாகவும் வில்லன் வேடத்துக்கான வலுவான பின்னணி கதையில் உள்ளது என்று உறுதி அளித்த பிறகே படத்தில் நடித்தார் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Next Story