விஜய் சேதுபதியின் மவுனப் படம்


விஜய் சேதுபதியின் மவுனப் படம்
x
தினத்தந்தி 6 May 2022 11:52 AM IST (Updated: 6 May 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

விஜய்சேதுபதி நடிக்கும் காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இதில் நாயகியாக நடிக்க அதிதிராவ் ஹைத்ரியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அரவிந்தசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் இணைந்துள்ளார்.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வந்த மவுன படமாகும். இந்த படத்தை தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிட்டனர்.

34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காந்தி டாக்ஸ் மவுன படம் உருவாகிறது. இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி ஏற்கனவே “சில நேரங்களில் அமைதி, மிகுந்த சத்தத்தை தரும். ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு புதிய ஆரம்பம் மற்றும் சவாலாக அமையும். உங்கள் அன்பும், ஆதரவும் என்றும் தேவை’’ என்று கூறியிருந்தார்.

Next Story