பார்த்திபனின் இன்னொரு சாதனை


பார்த்திபனின் இன்னொரு சாதனை
x
தினத்தந்தி 6 May 2022 2:56 PM IST (Updated: 6 May 2022 2:56 PM IST)
t-max-icont-min-icon

உலக திரை வரலாற்றில், ஒரே ‘ஷாட்’டில் ஒரு படத்தை உருவாக்கியிருப்பது, இதுவே முதல்முறை.

தமிழ் சினிமாவில் புதுமைகளை செய்பவர், டைரக்டர்-நடிகர் பார்த்திபன். ஏற்கனவே அவர் ஒருவர் மட்டும் நடித்து, ‘ஒத்த செருப்பு’ என்ற சாதனை படத்தை கொடுத்தார். அந்த படம் நிறைய விருதுகளை அள்ளியது. அடுத்ததாக அவர், ஒரே ‘ஷாட்’டில் ஒரு படத்தை உருவாக்கி சாதனை புரிந்து இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு, ‘இரவின் நிழல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். உலக திரை வரலாற்றில், ஒரே ‘ஷாட்’டில் ஒரு படத்தை உருவாக்கியிருப்பது, இதுவே முதல்முறை. இதற்காக 200 தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர்.

50 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான ‘செட்’டில், 300 நடிகர்கள் ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருட கதைக்களம் கொண்ட முதல் ‘சிங்கிள் ஷாட்’ படம், இது.


Next Story