கேத்தரின் தெரசாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
கல்லூரி மாணவி போல கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட கேத்தரின் தெரசா, உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்ததே அதற்கு காரணம்.
2014-ம் ஆண்டு ‘மெட்ராஸ்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ‘கதகளி', ‘கணிதன்', ‘கடம்பன்', ‘கதாநாயகன்', ‘கலகலப்பு-2', ‘வந்தா ராஜாவா தான் வருவேன்', ‘நீயா-2' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு படங்களிலும், ஒரு சில கன்னட-மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
2019-ம் ஆண்டு ‘அருவம்' படத்துக்கு பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. ஓரிரு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கேத்தரின் தெரசா பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரி மாணவி போல கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட அவர், உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்ததே அதற்கு காரணம்.
அதேவேளை கேத்தரின் தெரசா, முன்பை விட இப்போது தான் மப்பும், மந்தாரமுமாக அழகாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story