அவதார் 2- டிரைலர் வெளியீடு: பிரம்மிக்க வைத்த கிராபிக் காட்சிகள்..
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவதார் படத்தின் டிரைலர் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது. “ எங்கு சென்றாலும் இந்த குடும்பமே நமது கோட்டை’ என்ற கேப்ஷனுடன் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. டிரைலரில் இடம் பெற்றுள்ள பிரம்மிக்க வைக்கும் கிராபிக் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
“Wherever we go, this family is our fortress.”
— Avatar (@officialavatar) May 9, 2022
Watch the brand-new teaser trailer for #Avatar: The Way of Water. Experience it only in theaters December 16, 2022. pic.twitter.com/zLfzXnUHv4
Related Tags :
Next Story