திருமணத்துக்கு தயாராகும் சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி திருமணத்துக்கு தயாராகி வருவதால் புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. ஆனால் அதற்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி போனார். தமிழில் ‘மாரி-2’, ‘என்.ஜி.கே.’ ஆகிய படங்களிலும், ‘பாவ கதைகள்’ எனும் வெப் தொடரிலும் நடித்தார்.
தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள ‘விராட பர்வம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்த படங்களை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகிவில்லை. மேலும் தேடி வரும் வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம். திருமணத்துக்கு தயாராகி வருவதால் புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. சாய் பல்லவி வீட்டில் விரைவில் ‘டும்... டும்... டும்...’ சத்தம் கேட்க போகிறது.
Related Tags :
Next Story