டாப்சி தயாரிக்கும் 2 படங்கள்


டாப்சி தயாரிக்கும் 2 படங்கள்
x
தினத்தந்தி 18 May 2022 3:03 AM GMT (Updated: 2022-05-18T08:33:35+05:30)

டாப்சி சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 2 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த டாப்சி சமீபகாலமாக இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அவர் இந்தியில் நடித்த பிங்க், நாம் ஷாபானா, தப்பட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையான சபாஷ் மித்து படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 2 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதில் ஒரு படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இன்னொரு படத்தில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு தக் தக் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதுபற்றி டாப்சி கூறும்போது, “ரசிகர்களுக்கு தெரியாத கதைகளை திரையில் சொல்ல முயற்சிக்கிறோம். சுதந்திரம் சொந்தமாக இருப்பது என்பதை உணர்ந்த 4 பெண்களின் கதைதான் தக் தக் படம்'' என்றார்.

Next Story