மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி


மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி
x

சூப்பர் குட் பிலிம்ஸ், தனது 100-வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளி யானது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில், 'பூவே உனக்காக' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விக்ரமன் டைரக்டு செய்திருந்த அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதுமட்டுமன்றி 'துள்ளாத மனமும் துள்ளும்', 'லவ் டுடே', 'திருப்பாச்சி', 'ஷாஜகான்', 'ஜில்லா' உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

94 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ், தனது 100-வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளி யானது.

இதுகுறித்து ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா கூறியதாவது:-

"நிச்சயமாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படத்தில் விஜய் நடிப்பார். சமீபத்தில் கூட விஜய்யுடன் பேசினோம். அவருக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கிறது. காலம் நிச்சயம் இதனை நடத்தி வைக்கும்".

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story